கல்லூரியை விட்டு AI உள்ளடக்க உருவாக்குநராக மாறிய 19 வயது இளைஞர் – மாதம் கோடிக்கணக்கில் வருமானம்
அமெரிக்கா: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான மேவரிக் மால்டின் (Maverick Maltin), கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி, செயற்...
அமெரிக்கா: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான மேவரிக் மால்டின் (Maverick Maltin), கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்கும் பணியில் முழுநேரமாக ஈடுபட்டு, தற்போது மாதந்தோறும் ஆறு இலக்க அமெரிக்க டாலர் வருமானத்தை (Six Figures) பிராண்டு ஒப்பந்தங்கள் மூலம் ஈட்டி வருகிறார்.
மேவரிக் மால்டின், Arizona State University-யில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து வந்தார். இருப்பினும், AI தொழில்நுட்பத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக 2025 ஆம் ஆண்டு TikTok தளத்தில் AI குறித்து எளிமையாக விளக்கும் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் வெளியிட்ட சில வீடியோக்களே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றதால், தனது படிப்பை நிறுத்தி முழுநேர உள்ளடக்க உருவாக்குநராக மாற முடிவு செய்தார்.
அவரது முக்கிய நோக்கம், 30 முதல் 65 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு ChatGPT உள்ளிட்ட AI கருவிகளை எளிமையாகப் புரியவைத்து, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த உதவுவதாகும். இந்த தனித்துவமான அணுகுமுறையால் குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தொடக்கத்தில் விளம்பர ஒப்பந்தங்களை ஏற்க தயங்கிய மேவரிக், தனது தந்தையின் ஆலோசனையின் பேரில் பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தற்போது அவரது வருமானத்தின் பெரும்பகுதி இத்தகைய பிராண்டு ஒப்பந்தங்களிலிருந்தே கிடைக்கிறது. மேலும், தனது பணியை விரிவுபடுத்த ஒரு திறமையான வீடியோ எடிட்டரையும் நியமித்துள்ளார்.
உள்ளடக்க உருவாக்க விரும்புபவர்களுக்கு அவர் வழங்கும் முக்கிய அறிவுரை: "புதியதை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்க வேண்டாம். மக்களுக்கு உண்மையில் பயனுள்ள உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்குங்கள். முதலில் நம்பிக்கையை உருவாக்குங்கள்; அதன் பிறகே வருமானத்தைப் பற்றி சிந்தியுங்கள்."
மேவரிக் மால்டின் தற்போது மீண்டும் கல்லூரிக்கு திரும்பும் திட்டம் இல்லை என்றும், AI தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு எளிமையாகக் கொண்டு சேர்ப்பதே தனது முக்கிய இலக்காக இருப்பதாக தெரிவித்துள்ளார்.